
2009 ஆம் நிதியாண்டுக்காக நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனைக்கு தமது கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் யோசனைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் அதனாலேயே தமது கட்சி இதனை எதிர்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டமானது நகைப்புக்குரிய விடையம் எனவும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சின் ஆட்சிக் காலத்தின்போதும் அப்பாவி பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள் வழங்கப்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

No comments:
Post a Comment