
வரவு செலவுத் திட்ட யோசனைகளின் பிரகாரம் 25 சத வீதத்தால் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாதென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கு பதிலாக 9 சத வீத பஸ் கட்டணத்தையே குறைக்க முடியுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
இந்த வீதத்தில் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டபோதிலும் அந்த குறைந்த கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாதெனவும் அவர் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தேசியக் கொள்கைகளை மீறும் வகையில் வகையில் போக்குவரத்து சபை கட்டணத்தில் மாற்றங்களை மேற்கொள்ளுமாயின் அதற்கு எதிராக கட்டண நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன்,தொழிற்சங்க நடவடிக்கைகளையும் மேற்கொள்ள நேரிடும் எனவும் கெமுனு விஜயரத்;ன கூறினார்.

No comments:
Post a Comment