
எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டதை அடுத்து ரயில் பயணிகளுக்கான கட்டணத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள முடியுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
டீசலின் விலை குறைப்புக்கு அமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் ரயில் கட்டணத்தை குறைக்க முடியுமென போக்குவரத்துத் துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கையொன்றையும் அவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் ரயில் கட்டணத்தை 15 வீதத்தல் குறைக்க முடியுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment