.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Saturday, November 8, 2008

க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது - பரீட்சைகள் திணைக்களம்


2008ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான கால அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் எதிர்வரும் டிசம்பர் 8ம் திகதி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பமாகும் இந்த பரீட்சைகள் டிசம்பர் 20ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கல்வி பொதுத்தராதர பரீட்சையானது நாடு முழுவதிலுமுள்ள 5 ஆயிரத்து 300 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2008ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர பரீட்சைக்கு நாடு முழுவதிலும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பரீட்சாத்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 20ம் திகதி முடிவடையவுள்ள கல்வி பொதுத்தராதர பரீட்சைகளைத் தொடர்ந்து டிசம்பர் 28ம் திகதி முதல் 2009ம் ஆண்டு ஜனவரி 06ம் திகதி வரை பரீட்சை வினாத் தாள் திருத்தும் பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments: