
யாழ. குடா நாட்டிலுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்களை மீள்குடியமர்த்துவது தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
காங்கேசன்துறையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யாழ். அரசாங்க அதிபர், யாழ். மாவட்ட படைத் தளபதி மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தெல்லிப்பளையின் உயர்பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் மக்களை மீள்குடியேற்றுவது குறித்தும் யுத்தம் இடம்பெறும் வன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் சிலியன்களை தங்க வைப்பது குறித்தும் இந்த கூட்டத்தின் போது ஆராயப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment