.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Tuesday, November 11, 2008


வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் கடுமையான மழை பெய்யக் கூடிய காலநிலை தோன்றுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக சூறாவளியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியக் கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அடுத்து வரும் 24 மணித்தியாலங்களுக்கு இந்த சூராவளியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகரித்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்கள உயர் அதிகாரி ஆனந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த தாழமுக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களே அதிகளவிலான மழை வீழ்ச்சியை பெறுவதுடன், சூராவளி தாக்கத்திற்குள்ளாகும் பிரதேசமாக அவையே அமைந்துள்ளதாகவும் ஆனந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

No comments: