
மட்டக்களப்பு - வவுணதீவு – மங்கிக்கட்டு பிரதேசத்திலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் இன்று அதிகாலை 1.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
ஆயுததாதரிகளினால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பவத்தையடுத்து குறித்த பிரதேசம் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர, இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுவருவதாகவும் கூறினார்.

No comments:
Post a Comment