.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Tuesday, November 11, 2008

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான தடையை மேலும் இரண்டு வருடங்களுக்கு இந்தியா நீடித்துள்ளது


இந்திய அரசினால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையானது மேலும் 2 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக புதுடில்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச் சாட்டுக்கள் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்ட காரணத்தினாலேயே இந்த தடை 2 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் வடக்கு பிரதேசத்தில் இருந்த போதிலும் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் இந்தியாவிலும் செறிந்து காணப்படுவதாக டில்லி உயர் நீதிமன்ற நீதி அரசர் விக்கரமஜித் சிங் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

தற்போது, உலகின் பல்வேறு நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்திய முன்னாள் பிரதமர் ரஜிவ் காந்தியின் கொலையானது இதற்கு ஒரு சிறந்த உதாரணம் எனவும் உயர்நீதிமன்ற நீதி அரசர் விக்கரமஜித் சிங் மேலும் தெரிவித்தார்.

No comments: