
வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைய இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிப்பொருட்களின் விலைகளை குறைக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலிய மற்றும் கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
157 ரூபாவாக இருந்த ஒக்டேய்ன் 90ரக பெற்றோலின் விலையை 15 ரூபாவால் குறைத்து புதிய விலையாக 142 ரூபாவிற்கும், 170 ரூபாவாக இருந்த ஒக்டேய்ன் 95ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்து புதிய விலையாக 155 ரூபாவிற்கும் இன்று முதல் விற்பனை செய்யப்படவுள்ளதாக கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எரிப்பொருட்களின் விலை குறைப்பிற்கு ஏற்ப 110 ரூபாவாக இருந்த ஒரு லீட்டர் டீசலின் விலை 80 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், 125 ரூபா 30 சதத்திற்கு வழங்கப்பட்ட சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 95 ரூபா 30 சதம் வரை குறைக்கப்பட்டு இன்று முதல் பாவனையாளர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 80 ரூபாவிற்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலையில் 20 ரூபாவை குறைத்து 60 ரூபாவிற்கு இன்று முதல் பாவனையாளர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை பெற்றோலிய மற்றும் கனியவள கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment