.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Friday, November 7, 2008

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்


இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.


நாட்டின் கைத்தொழில்துறையைக் கட்டியெழுப்ப திட்டங்களை வகுத்துள்ளதாக அரசு கூறியபோதிலும் பாடசாலை மாணவர்களுக்கான பதணிகளில் இருந்து அன்றாட பாவனைக்காக எடுத்துக் கொள்ளப்படும் அனைத்து பொருட்களின் விலைகளையும் உயர்த்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் கொண்டு செல்லும் வேளையில் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் அமையவில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுவினர் தெரிவித்துள்ளனர்.


இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்களைப் போன்று தனியார் துறையினருக்கு நிவாரணம் வழங்கப்படாததன் மூலம் அவர்களுக்கு அநீதி இளைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இவ்வாறான விடயங்களைக் கருத்திற்கொண்டே வரவு செலவு திட்ட யோசனை மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு எதிராக தமது வாக்கைப் பயன்படுத்த எண்ணியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

No comments: