.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Friday, November 7, 2008


வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடமையாற்றி வந்;த தமிழ் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.


குறித்த நபர் கடமையாற்றி வந்த வர்த்தக நிலையத்திற்கு நேற்று மாலை 6.30 அளவில் வந்த இனந்தெரியாதோர் அவரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.


இவரை நான்கு பேர் அடங்கிய குழுவொன்று வேன் ஒன்றில் வந்து கடத்திச் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை வவுனியா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

No comments: