
தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் காலஞ்சென்ற சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு மாவீரர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
கிளிநொச்சியில் நேற்று முற்பகல் 9.30 மணியளவில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிளிநொச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் பொதுச்சுடரை பரந்தன் வட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் நக்கீரன் ஏற்றினார்.
தமிழீழத் தேசியக் கொடியை முழங்காவில் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் ஏற்றினார்.
அதேவேளை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேசிய போர் எழுச்சிக்குழு செயலாளர் சஞ்சீவன் தலைமையில் அங்கு நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரை மூன்று மாவீரர்களின் தாயார் திருமதி பொன். தியாகம் ஏற்றினார்.
தமிழீழ தேசியக் கொடியை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் நேற்று காலை 9.30 மணியளவில் ஏற்றினார்.
பிரிகேடியர் சு.ப. தமிழ்ச் செல்வனின் திருவுருவப்படத்திற்கு அவரது துணைவியார் இசைச்செல்வி மற்றும் அவரது பிள்ளைகள் சுடரேற்றி, மலர்மாலை சூட்டினர்.
அதேவேளை முள்ளியவளை, கண்டாவளை, வட்டக்கச்சி மற்றும் யாழ்ப்பாணத்திலும் இதுதொடர்பான நிகழ்வுகள் இடம்பெற்றன.

No comments:
Post a Comment