.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Monday, November 3, 2008

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் ஏற்பாடு செய்த கண்டனப் பேரணியினால் கல்முனையில் இயல்பு நிலை பாதிப்பு


கல்முனையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து அங்கு இன்று கண்டனம் பேரணி ஒன்று இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


இந்த கண்டனப் பேரணியை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஏற்பாடு செய்ததுடன், அங்கிருந்த மக்களை பலவந்தமாக இந்த பேரணியில் ஈடுபடுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பேரணியானது இன்று முற்பகல் 11 மணிக்கு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த பேரணியாளல் கல்முனை பகுதியின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரதேசத்திலுள்ள அரச அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் அங்குள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன், பாடசாலைகளும் இயங்கவில்லையென எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த பிரதேசத்தில் போக்குவரத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: