
இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 65 மீனவர்களை உடனடியாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இலங்கை மீனவர்கள் அனைவரையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சென்னையில் உள்ள இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் P.M.அம்ஸா தெரிவித்தார்.
அபராதம் விதிக்கப்பட்ட 65 மீனவர்களையும் இலங்கைக்கு உடனடியாக அனுப்பி வைப்பது தொடர்பாக இந்திய உள்விவகார நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அமைச்சருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் P.M.அம்ஸா மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment