.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Tuesday, November 11, 2008

கண்டி நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் சோதனையிட நடவடிக்கை.


கண்டி நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் சேதனையிடும் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைமையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன்போது, வாகன வருமான உத்தரவு பத்திரமின்றி மேற்கொள்ளப்படும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகளை மேற்கொள்வோரை இலக்கு வைத்தே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.


அதன்படி, வாகன வருமான உத்தரவு பத்திரமின்றி பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட 10 வாகனங்கள் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு குறைப்பாடுகளுடன் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட வாகனங்கள் பலவும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

No comments: