
எதிர்வரும் சில தினங்களில் பூநகரி வீதியை திறக்கவுள்ளதாக ஊடக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்ப தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று விஷேட உரையொன்றை ஆற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தற்போது வடக்கில் முன்னெடுக்கப்பட்டு;வரும் இராணுவ முன்னெடுப்பானது மனிதாபிமான நடவடிக்கையே என நாட்டில் உள்ள மக்களில் நூற்றுக்கு 80 வீதமானோர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனம் அடையச் செய்வதற்கான தாக்குதல்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த மனிதாபிமான படை முன்நகர்வானது பொதுமக்களுக்கு எதிரானதல்லது எனவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

No comments:
Post a Comment