.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Sunday, November 2, 2008

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கிடப்பில் போடவில்லை என்கிறார் தமிழக முதல்வர் மு.கருணாநிதி.


ஈழத் தமிழர் பிரச்சினைக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கிடப்பில் போடவில்லை என தமிழக முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் ராமதாஸ், தமிழக முதல்வரின் மீது குற்றஞ்சாட்டியதற்கு பதில் கூறும் வகையில் இன்று தமிழக முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, அந்த தீர்மானங்களை இந்திய மத்திய அரசிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அதன் பிறகு தான் மத்திய அரசு இலங்கை தூதுவரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை ஜனாதிபதியுடன் பேசியது மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை தம்மிடம் கலந்தரையாடியது ஆகியவற்றை அவர் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழகத்தில் இடம்பெற்ற மனித சங்கிலி போராட்டம் மற்றும் நேற்றைய தினம் நடைபெற்ற நடிகர் சங்க உண்ணாவிரத போராட்டம் ஆகியவற்றை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் பல விடயங்கள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றும் தமிழகத்தில் யுத்ததினால் பாதிப்படைந்துள்ள ஈழத் தமிழர்களுக்கு நிவாரண தொகை சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: