.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Sunday, November 2, 2008

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


வவுனியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.


இந்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


வவுனியா பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம்பெற்றுவரும் மோதல்களின் போதே இவர் உயிரிழந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.


வவுனியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: