
ஈழத் தமிழர்களுக்காக இந்திய தமிழ் நாட்டின் மூலம் அத்தியவசிய பொருட்கள் விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தலைமையில் சேகரிக்கப்பட்டுவரும் நிவாரண தொகையிலிருந்து முதற் கட்டமாக 100 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிவாரண பொருட்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிவாரண பொருட்கள் அரசாங்கத்தினூடாகவே வன்னி பெருநிலப்பரப்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment