
சுத்திகரித்து கலன்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவரும் நீரிணை இரசாயன பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டிலுள்ள நீர் சுத்திகரிப்பு தொழில்சாலைகள் மற்றும் விநியோக நிலையங்கயில் இந்த பரிசோதனை நடவடிக்கைககை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் p. மதுரங்க தெரிவித்தார்.
இதற்காக 106 தொழிற்சாலைகள் மற்றும் விநியோக நிலையங்களை தேர்வு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்போது, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நீர்க் கலன்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் p. மதுரங்க குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment