
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு,உலக வல்லரசு நாடான அமெரிக்கவில், வரலாற்றில் முதன் முறையாக கருப்பினத்தவர் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
அதில் பெரும்பான்மை மாநிலங்களின் வாக்குகளை ஜனநாயகக்கட்சியின் வேட்பாளர் பராக் ஒபாமா கைப்பற்றியுள்ளார்.
அத்துடன், 538 தேர்தல் தொகுதிகளில் பராக் ஒபாமாவும் 338 தொகுதிகளையும், குடியரசு கட்சியின் வேட்பாளர் ஜோன் மொக்கேயினும் 156 தொகுதிகளையும் இதுவரை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக கருப்பினத்தவரான பராக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டமை சிறப்பம்சமாகும். ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மெக்கைனுக்கு வாழ்த்து செய்தி.

No comments:
Post a Comment