.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Wednesday, November 5, 2008

மதவாச்சியில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


மதவாச்சி - பூனாவை பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில் இருவர் காயமடைந்துள்ளனர்.


இந்த வெடிப்பு சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதக மதவாச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொடித்துவக்கு தெரிவித்தார்.


எண்ணெய் கொள்கலன் ஒன்றின் மீது தீ வீழ்ந்ததினாலேயே இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும் மதவாச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.


அத்துடன், சம்பவத்தில் தாயும் மகனுமே காயமடைந்து மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக மதவாச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொடித்துவக்கு கூறினார்.

No comments: