
லிபியா நாட்டைச் சேர்ந்த தொழில் வாய்ப்பு அமைச்சர் அடங்கிய குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
இந்த குழு நேற்றிரவு 11.10 அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ருடு 196 என்ற விமானத்தின் மூலம் இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழுவில் லிபியா நாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மொகமட் முவுதுலும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்களை இலங்கை தொழில் வாய்ப்பு அமைச்சின் உத்தியோகஸ்தர்கள் வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலிருந்து லிபியாவிற்கு தொழிலுக்கு செல்வோர் தொடர்பாக இலங்கை அரசுடன் விசேட பேச்சு வார்த்தை ஒன்றை நடத்துவதற்காகவே இவர்கள் இலங்கை வந்துள்ளதாக தொழில் வாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment