.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Sunday, November 2, 2008

சட்ட விரோத ஹேரோயின் வைத்திருந்த இருவர் கைது.


சட்ட விரோதமாக ஹேரோயின் விற்பனையில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.'


இவர்களை நேற்றிரவு தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.


குறித்த சந்தேக நபர்களை கைது செய்யும் போது, அவர்களிடமிருந்து 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 250 கிராம் ஹேரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


கைது செய்யப்பட்ட இருவரில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர கூறினார்.

No comments: