
ஹட்டன் பிரதேசத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று முன்தினம் ஹட்டன் பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதலின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட குறித்த இளைஞனிடம் இலங்கையின் சேதனைச் சாவடிகள் அடங்கிய இலங்கை படமொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
குறித்த இளைஞனிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஹட்டன் பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர கூறினார்.

No comments:
Post a Comment