.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Sunday, November 2, 2008

ரேடார் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்த இந்தியா நடவடிக்கை


இந்தியாவின் ரேடார் கட்டமைப்பு மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக இந்திய பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதன் அடிப்படையில் இந்திய விமானப்படையின் படை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்காக செயற்திறன் மிக்க ரேடார் கட்டமைப்பொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


குறித்த ரேடார் கட்டமைப்பு விரிவாக்கத்தின் மூலம் இந்தியக் கடல் எல்லைகள் மற்றும் இலங்கையின் பெரும்பகுதிகள் தொடர்பான தகவல்களை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


தற்போது இயங்கிவரும் இராணுவ மற்றும் சிவில் ரேடார் கட்டமைப்புக்களிடையே இணைப்பை ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக தென் இந்தியப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக குறித்த ரேடார் கட்டமைப்பு அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: