
புத்தளம் - கல்பிட்டி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரித்தார்.
குறித்த நபர் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கடற்படையினர் இவரை கைது செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து தேசிய அடையாள அட்டைகள் 3, வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் 3, சிம் அட்டைகள் 8றப்பர் முத்திரைகள் 15 மற்றும் பதிவு புத்தகங்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் மேலும் அவர் கூறினார்.
அத்துடன், குறித்த நபர் ஊடகவியலாளர் பயன்படுத்தும் ஆள்அடையாள அட்டை ஒன்றையும் வைத்திருந்ததாகவும் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறித்த நபர் கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment