
மட்டக்களப்பு சித்தான்டி முருகன் ஆலய முன்றலில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு;ச் சம்பத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு - குடிம்பிமலை கோட்;ட சித்தான்டி பிரதேச பொறுப்பாளர் மற்றும் அவரது துணையாளருமே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கப்பாண்டியன் என்றழைக்கப்படும் 26 வயதுடைய பத்மநாதன் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது உதவியாளருமான சுடர் என்றழைக்கப்படும் சின்னபிள்ளை யோகராசா ஆகியோரே கொல்லப்பட்டுள்ளது.
ஆலயத்தின் இறுதி நாள் உற்சவ வேளையில் நிரைந்திருந்த சன கூட்டத்தின் ஊடாக மோட்டார் சைக்கிலிள் சென்று கொண்டிருந்த வேளையில் பிஸ்டல் குழுவினரால் சுடப்பட்டுள்ளதாகவும், இதனை அடுத்து பக்தர்கள் சிதறி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment