
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவியுள்ள குடியரசு கட்சி வேட்பாளர் ஜோன் மெக்கெய்ன், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஒபாமாவுக்கு கிடைத்த இந்த வெற்றி கறுப்பினத்தவருக்கு கிடைத்த வெற்றியல்ல எனவும், அது முழு அமெரிக்காவுக்கும் கிடைத்த வெற்றி எனவும் அவர் கூறியுள்ளார்.
தனது மாநிலமான அரிசோனாவில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர், தானும் பராக் ஒபாமாவும் கொள்கை ரீதியில் வேறுபட்ட துருவங்களாக இருந்தாலும், அமெரிக்காவை கட்டியெழுப்பும் ஒபாமாவின் நடவடிக்கைகளுக்கு தான் ஒத்துழைப்பு வழங்குவேன் எனவும் ஜோன் மெய்கேன் உறுதியளித்துள்ளார்.

No comments:
Post a Comment