
இந்திய புது டில்லியில் நடைபெற்றுவரும் வங்காளவிரிகுடாவை அண்மித்த நாடுகளுக்கான பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டிற்கு கலந்து கொள்ளச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாலைதீவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி இன்றைய தினம் மாலைதீவு நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கiயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முஹம்மட் நஷீடின் பதவிப் பிரமாண வைபவத்தில் கலந்து கொள்ளும் பொருட்டே அவர் அங்கு சென்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைத்தீவுக்கு சென்ற அவர் இந்தியாவிற்குத் திருப்பியுள்ளதுடன் இன்றும் நாளையும் புதுடில்லியில் நடைபெற்றுவரும் மாநாட்டில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டிலுள்ள அரச தரப்பு உயர் அதிகாரிகள் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டெல்லியில் நடைபெற்று வரும் மாநாட்டிற்கு கலந்து கொள்ளும் பொருட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment