
கொழும்பு – மாத்தறை இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மாத்றையிலிருந்த கொழும்பு நோக்கிவந்த ‘சாகரிக்க’ ரெயில் பாதையைவிட்டு விலகியதினாலேயே கொழும்பு – மாத்தறை இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்தபோது, களுத்துறை – கட்டுக்குறுந்தை பிரதேசத்தில் குறித்த ரெயில் பாதையை விட்டு விலகியதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் கூறியுள்ளது.
இதேவேளை, இடைநிறுத்தப்பட்டுள்ள குறித்த ரெயில் சேவைகள் விரைவில் வழமைக்கு திரும்பும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment