.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Tuesday, November 11, 2008

கிளைமோர் தாக்குதலில் ஒருவர் பலி.


வன்னியில் அரச கட்டுப்பாடற்ற பகுதியில் கிளைமோர் குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இந்த கிளைமோர் தாக்குதலானது இன்று காலை இடம்பெற்றதாகவும், இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரே இந்த கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவிக்கின்றன.


கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், குறித்த நபரின் சடலம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: