.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Sunday, November 9, 2008

கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வரும் மக்களுக்கு குடியிருப்புக்களை அமைக்கும் நடவடிக்கை.


வன்னியில் தற்போது இடம் பெற்று வரும் யுத்தம் காரணமாக இராணுவ கட்டுபாட்டு பகுதிக்கு பெருமளவான மக்கள் கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் மக்களை நிரந்தரமாக தங்க வைப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


தற்போது மன்னார் களிமோட்டை பிரதேசத்தில் தங்கியுள்ள மக்களில் தெரிவு செய்யப்பட்ட 800 குடும்பங்களை வவுனியாவுக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அவ்வாறு கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து வரும் மக்களை தங்க வைப்பதற்காக வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் மெனிக்பாம் என்ற இடம் தெரிவு செய்யப்பட்டு காடழிப்பு வேலைகள் இடம் பெற்று வருவதாக வவுனியா அரசாங்க செயலகம் தெரிவித்துள்ளார்.


காடழிப்பு வேலை இன்னும் சில நாட்களில் முடிவடைந்ததன் பின்னர் குறித்த பகுதியில் மக்கள் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரச செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.


இதேவேளை, இடம்;பெற்றுவரும் யுத்தம் காரணமாக இராணுவ கட்டுபாட்டு பிரதேசத்திற்கு பெரும்பாலன மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சில இடங்கள் தெரிவு செய்யப்பட்டு அதற்கான வேளைகள் இடம்பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: