.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Sunday, November 9, 2008

இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட மடு பிரதேசத்திற்கு சர்வதேச ஊடகவியளர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


கைப்பற்றிய பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்களை இராணுவத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர்.


விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புனித மடு தேவாலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதியும் இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதன் பின்னர் சர்வதேச ஊடகவியளாலர்களை அந்த பகுதிக்கு இரண்டாவது தடவையாக அழைத்தச் சென்றுள்ளனர்.


கடந்த வெள்ளிக்கிழமை அநுராதபுரத்திலிருந்து ஹெலிகப்டர் மூலம் மடு பகுதிக்கு அழைத்தச் செல்லப்பட்ட இவர்களை, மடு தேவாலயம் உட்பட பல பகுதிகளுக்கு இராணுவத்தினர் அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியளாலர்களுக்கு அப்பகுதியின் பாதுகாப்பு தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


ரொய்டர், பி.பி.சி, அல்ஜசீரா ஆகிய சர்வதேச செய்திச் சேவைகளைச் சேர்ந்த ஊடகவியளாலர்கள் குறித்த சர்வசே ஊடகவியளாலர் பயணித்தில் பங்கேற்றியமை குறிப்பிடத்தக்கது.

No comments: