
மட்டக்களப்பு - நொச்சிமுனை - இசைநடனக் கல்லூரி வீதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 26 வயதுடைய விநாயகமூர்த்தி பசுதேவன் என்பரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
கட்டடவேலைத் தொழிலாளியான குறித்த இளைஞர், இனந்தெரியாத ஆயுததாரிகளால் வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments:
Post a Comment