.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Tuesday, November 4, 2008

வைத்திய அதிகாரிகளுக்கு இடமாற்றம்.


தொடர்ச்சியாக 5 வருடங்களாக ஒரே மருத்துவமனையில் சேவையில் இருக்கும் வைத்தியசாலைப் பணிப்பாளர்களை இடமாற்றம் செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.


இதன்படி, 55 வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு இடமாற்றத்தினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, தற்போது வைத்தியசாலைப் பணிப்பாளர்களாக பணியாற்றும் பணிப்பாளர்கள், தற்போது அவர்கள் பணியாற்றும் அதே பிரிவுகளுக்கே மாற்றம் செய்யப்படுவர் என சுகாதார அமைச்சின் அத்தியட்சகர் கலாநிதி டாக்டர் டெரன்ஸ் டி சில்வா தெரிவித்துள்ளார்.


உயர் நீதி மன்றம் வழங்கி தீர்ப்புக்கமையவே இந்த மாற்றத்தின்போது ஒழுங்குகள் அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.


அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர்களுக்கு அதற்கு ஒத்த நியமனம் கிடைக்கவில்லை எனில், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி அவர்களுக்கு மற்றங்கள் வழங்கப்படமாட்டாதெனவும் சுகாதார அமைச்சின் அத்தியட்சகர் கலாநிதி டாக்டர் டெரன்ஸ் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

No comments: