.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Tuesday, November 4, 2008

புத்தளம் பிரதேசத்தில் பஸ் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.




புத்தளம் - குருநாகல் பிரதான வீதியினூடான தனியார் போக்குவரத்து பஸ்களின் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



நேர சூசி அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் தனியார் போக்குவரத்து பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.



இந்த நிலையில், இன்று வடமேல் மாகாண போக்குவரத்து ஆணைக்குழு, வடமேல் மாகாண போக்குவரத்து அமைச்சர் மற்றும் வடமேல் மாகண முதலமைச்சர் ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து நேர சூசி அட்டவணையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்தனர்.



இதையடுத்து, அனைத்து தனியார் பஸ்களும் சேவைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

No comments: