
மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிலிள் பயணம் செய்யும் அனைவரும் தலை கவசம் அணி வேண்டும் என மட்டக்களப்பு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த தலைகவசம் அணியும் நடைமுறையானது இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சட்டவிதிகளை மீறுபவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த இராணுவ நடவடிக்கையின் போது தலைகவசம் அணிவது, குறித்த மாகாணத்தில் தடைசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment