.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Monday, November 3, 2008

கல்முனையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது


அம்பாறை - கல்முனை - வாடிவீடு வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.


இவர்களில் 4 பேர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் எனவும் ஏனையவர் பொதுமகன் எனவும் கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு 8.30 அளவில் இடம்பெற்றதாக கல்முனைப் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பொது மகனே இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக விரிவான முதற்கட்ட விசாரணைகளை கல்முனை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

எனினும், இந்த சம்பவத்தின் பின்னணி இதுவரை அறியப்படவில்லை என கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: