.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Monday, November 3, 2008

கந்தளாயில் துப்பாக்கிப் பிரயோகம்


கந்தளாய் - கோமரண்கடவெல பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.


இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 2 பெண்களும் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கான காரணம் தொடர்பாக கந்தளாய் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: