
எப்பாவெல – கிரலோகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று பிற்பகல் இடம் பெற்றதாக எப்பாவெல பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் ஒன்றுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் சென்ற நால்வரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் சிறு குழந்தை ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment