.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Saturday, November 8, 2008

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே இலங்கைக்கு நிரந்தர சமாதானம் கிடைக்கும் - முதல்வர் கருணாநிதி


தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே இலங்கையில் நிரந்தர சமாதானத்தை எட்ட முடியும் என தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.
வடக்கில் முன்னெடுக்கப்படும் இராணுவ நகர்வுகள் நிறுத்தப்பட்டு, யுத்த நிறுத்தம் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இணக்கப்பாட்டின் மூலமே நிலையான யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்த முடியும் என கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய தமிழகத்தில் வெளியாகும் பத்திரிகையொன்றுக்கு பேட்டியளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்பதே ஒட்டு மொத்த தமிழனத்தின் கோரிக்கையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு தரப்பினருக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த முடியும் என தாம் கருதவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் தமிழகத்தில் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுவதாக தமிழக முதல்வர் மு. கருணாநிதி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: