.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Thursday, October 30, 2008

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பு – வாழைச்சேனை – சு. னு. யு. சந்தியில் வைத்து இனந் தெரியாத ஆயுததாரிகளால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


இந்தச் சம்பவம் நேற்றிரவு 9.50 அளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவத்தில் உயிரிழந்தவர் வழைச்சேனை – கறுவாக்கேணி – அண்ணா வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஜேக்கப் றொபின்ஷன் எனவும் வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


சடலம் மரண பரிசோதனைக்காக வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்;ளதாக தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் கூறினர்.

No comments: