.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Thursday, October 30, 2008

அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


இந்திய - அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


இந்த கொலைமிரட்டல் கடிதம் மூலம் வந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளனர்.


தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தால், பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பெனாசிர் பூட்டோவுக்கு ஏற்பட்ட கதிதான், ஜெயலலிதாவிற்கும் ஏற்படும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.


தமிழ் மைந்தன் என்ற பெயரில் விடுக்கப்பட்ட மிரட்டல் கடித்தில் ‘உலக தமிழின பாதுகாப்பு கழகம்’, பாங்கொக் - தாய்லாந்து என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.


இதனால், ஜெயலலிதாவுக்கு அதி உச்ச பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: