களனி திஸ்ஸ மின்விநியோக நிலையத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலினால் மின்விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படவில்லை என மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த தாக்குதலினால் மின்விநியோக நிலையத்திலிருந்த மின் மாற்றிகளுக்கே சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த மின்மாற்றியை திருத்தியமைக்கும பணிகளை துரித கதியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் று.னு.து. சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்றிரவு விமானத் தாக்குதலை மேற்கொண்ட போதிலும் அது அவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மின்மாற்றியில் தீபிடித்ததாகவும் அதனை தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment