
மன்னார் - தள்ளாடி பிரதேசத்தில் உள்ள இராணுவ கட்டளை தலைமையகம் மீது தமிழீழ விடுதலை புலிகளின் விமானப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் இலகு ரக விமானங்களை கொண்டு நேற்றிரவு 10.40 அளவில் இராணுவம் கட்டளை தலைமையகம் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறினார்.
இந்த தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
இவர்கள் மூவரும் தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மன்னார் - தள்ளாடி இராணுவ கட்டளை தலைமையகத்திற்கும் களனி திஸ்ஸ மின்விநியோக நிலையத்திற்கும் அருகில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

No comments:
Post a Comment