.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Wednesday, October 29, 2008

தமிழீழ விடுதலைப் புலிகளின் சடலங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாம்!


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான மூன்று சடலங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


இந்த சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நேற்றைய தினம் ஓமந்தை சோதனைச் சாவடி ஊடாக அவர்களிடம் கையளித்துள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சரசி விஜயரத்ன தெரிவித்தார்.


குறித்த சடலங்களை பாதுகாப்புத் தரப்பினர் நேற்றைய தினம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்ததாகவும் இதனை உடனடியாக அவர்களிடம் ஒப்படைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


மன்னார் வைத்தியசாலையில் இருந்து கிடைக்கப்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான சடலங்களே நேற்றைய தினம் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

No comments: