.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Wednesday, October 29, 2008

24 குடும்பங்கள் இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளன.


நாட்டில் இடம்பெற்றுவரும் மோதல்களினால் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக அகதிகளாக இந்தியாவிற்கு சென்ற 24 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நேற்றைய தினம் மட்டக்களப்பில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த 24 குடும்பங்களையும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் ஆலயம் மட்டக்களப்பில் குடியமர்த்தியுள்ளது.

இவற்றில் 23 குடும்பங்கள் மட்டக்களப்பைச் சேர்ந்தவை எனவும் ஏனைய 1 குடும்பம் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தது எனவும் உயர் ஸ்தானி;கர் ஆலயம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் மீள்குடியமர்த்தப்பட்ட இவர்களுக்கு வேண்டிய வசதிகளை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் ஆலயம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: