.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Monday, October 27, 2008

இம்முறை வரவு செலவு திட்டத்திற்கு ஜே.வி.பி ஒத்துழைப்பு வழங்காது என ஐக்கிய தேசிய கட்சிதெரிவித்துள்ளது.


இம்முறை சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்திற்கு ஜே.வி.பி ஆதரவாக வாக்களிக்காதென ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.


கடந்த வரவு செலவு திட்டத்தின் போது கிடைக்கப் பெற்ற ஒத்துழைப்பை இம்முறை அந்த கட்சியிலிருந்து எதிர்பார்க்க முடியாதென ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


எனினும், இம்முறை வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் என பல அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை முன் வைத்து வருவதகாவும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: