.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Monday, October 27, 2008

இலங்கை மீனவர்களை விடுவிக்க இந்தியா நடவடிக்கை.


இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் சிலரை விடுதலை செய்வதற்கு தென் இந்திய மாநில அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.


இதன்படி, கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்வதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த 10 மீனவர்களுடன் அவர்களுடைய இரண்டு படகுகளையும் விடுவிக்க தென் இந்திய மாநில அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக மீன்பிடி திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதுவரை, 90ருக்கும் அதிகமான இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் பிரிவினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: